அரியாங்குப்பம் : வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி, 23; கூலி வேலை செய்து வருகிறார்.
இவர், கடந்த 4ம் தேதி இரவு பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.