புதுச்சேரி : மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் 45 பேர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாம் நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விரிவுரையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளாக நேற்றும் ஆசிரியர்கள் பாடம் நடத்த வகுப்பிற்கு வராததை கண்டித்து மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.