உடுமலை:உடுமலைப் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போதை விழிப்புணர்வு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்--2, நீதிபதி மீனாட்சி மற்றும் வக்கீல்கள், அப்துல்நாசர், மகேஸ்வரன், மகாலட்சுமி, சத்தியவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் சிந்தனைகள், போதை பொருட்களால் சமூகம், குடும்பம் மற்றும் உடல்நலக்கேடு குறித்தும், குழந்தைகளுக்கான சட்டங்கள், சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான, போக்சோ சட்டம் குறித்தும், சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் மற்றும் அவற்றை கடை பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர்.