''நேர்ல பார்த்து, 'சலசல'ப்பை அடக்கிட்டார்னு சொல்லுதாவ வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''போன வாரம் ஒரு சினிமா விழாவுல பேசிய வி.சி., தலைவர் திருமாவளவன், 'சினிமா 'கார்ப்பரேட்' மயமாகிட்டு வருது... ஒரு நபர் கையில தியேட்டர்கள் சென்றால் என்னாவது'ன்னு பொரிஞ்சு தள்ளிட்டாருல்லா...

''உதயநிதியின், 'ரெட் ஜெயன்ட்' நிறுவனத்தை மனசுல வச்சு தான், திருமா இப்படி பேசியதா தகவல்கள் பரவிட்டு வே... அமைச்சர் உதயநிதி அடுத்த சில நாட்கள்லயே, திருமாவளவனை அவரது அசோக் நகர் ஆபீசுக்கே நேர்ல போய் பார்த்து பேசியிருக்காரு...
''அப்ப, 'திருமாவளவன் பேச்சுக்கு விளக்கம் தந்துட்டு, தன் மீது தொடர்ந்து விமர்சனம் வராத வகையில, அவரை, 'ஆப்' பண்ணிட்டும் வந்துட்டார்'னு, உதயநிதியின் ஆதரவாளர்கள் பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.