உடுமலை:உடுமலை, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சூரியன், உழவுக்கு உதவும், மாடுகள், ஏர்க்கலப்பை மற்றும் நீர் நிலைகளை வாழ்த்தும் வகையிலும், பட்டிப்பொங்கல் வைத்து, மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும், கிராமங்களில் இன்றளவும் கொண்டாடப்படும், சலகெருதுவுடன் விளையாட்டு, கும்மியாட்டம், பெண்கள் குலகை சத்தம், ரேக்ளா மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகள் கொண்டு வரப்பட்டு, உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. டி.எஸ்.பி., தேன்மொழிவேல், பள்ளி தாளாளர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், முதல்வர் மாலா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.