வால்பாறை:வால்பாறை அண்ணாநகர் ஸ்ரீ ராமர் கோவிலில், 45ம் ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. இன்று, 13ம் தேதி பழநி பாதயாத்திரை குழுவின் சார்பில், மாலை, 6:00 மணிக்கு பஜனை நடக்கிறது.
நாளை, 14ம் தேதி, காலை, 11:00 மணிக்கு ஸ்ரீ கோதண்டராமருக்கும், சீதாதேவிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா தர்மலிங்கம், திருவிழா தலைவர் தமிழ்செல்வன், பொருளாளர் ராம்பிரபு, செயலாளர் நாகரத்தினம் உட்பட பலர் செய்து வருகின்றனர்.