ஆனைமலை:ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில், காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, நரிக்கல்பதியில் உள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, நேற்று முன்தினம் நடந்தது.
புதுடில்லியில் உள்ள, வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின், ஒருங்கிணைந்த பணி திட்டத்தின் கீழ், நடத்தப்பட்ட இந்த பயிற்சியில், விவசாயிகளுக்கு இடுபொருட்களும் வழங்கப்பட்டன.
இதில், தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சுரேஷ், தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, தென்னங்கன்றுகள், மண் புழு உரம், பேசில்லஸ் மற்றும் டிரைக்கோடெர்மா போன்ற உயிரி இடுபொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஆராய்ச்சி நிலையத்தின், பயிர் நோயியல் துறை இணை பேராசிரியர் முனைவர் லதா உடனிருந்தார்.
Advertisement