முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

Added : ஜன 13, 2023 | |
Advertisement
புதுடில்லி,:முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ், 75, உடல் நலக்குறைவால் குருகிராமில் நேற்று காலமானார். ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ். நேற்று மாலை நினைவிழந்த நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சரத் யாதவ் எடுத்து வரப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி,
 சரத் யாதவ் காலமானார்



புதுடில்லி,:முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ், 75, உடல் நலக்குறைவால் குருகிராமில் நேற்று காலமானார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ். நேற்று மாலை நினைவிழந்த நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சரத் யாதவ் எடுத்து வரப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, இரவு காலமானார். இந்த தகவலை சரத் யாதவின் மகள் சுபாஷினி உறுதிப் படுத்தியுள்ளார்.

பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, லோக் தந்திரிக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை துவக்கியவர், சரத் யாதவ். பின், அந்த கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X