புதுடில்லி,:முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ், 75, உடல் நலக்குறைவால் குருகிராமில் நேற்று காலமானார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ். நேற்று மாலை நினைவிழந்த நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சரத் யாதவ் எடுத்து வரப்பட்டார்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, இரவு காலமானார். இந்த தகவலை சரத் யாதவின் மகள் சுபாஷினி உறுதிப் படுத்தியுள்ளார்.
பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, லோக் தந்திரிக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை துவக்கியவர், சரத் யாதவ். பின், அந்த கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தார்.