சென்னை:தமிழக அரசின் கூட்டுறவு வங்கி கணக்கை, 'ஹேக்' செய்து, 'ஆன்லைன்' வாயிலாக, டில்லியில் இருந்து காலை 6:00 - 9:00 மணி வரை, 41 முறை, 2.61 கோடி ரூபாய் கொள்ளையடித்த நைஜீரிய வாலிபர்களை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ், சென்னை பாரிமுனையில், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைமையகம் செயல்படுகிறது. இந்த வங்கிக்கு, நவம்பரில் மர்ம நபர்கள், 'இ - மெயில்' ஒன்றை அனுப்பினர்.
வரவு - செலவு தொடர்பாக ஏதோ தகவல் வந்திருப்பதாக வங்கி அதிகாரிகள், அந்த இ - மெயிலை திறந்தனர். அதன்பின், வங்கி கணக்கில் இருந்து, 2.61 கோடி ரூபாய் கொள்ளை போனது.
இது குறித்து, வங்கி அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு, 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் வாயிலாக கொள்ளை நடந்து இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. தனிப்படை போலீசார், மாநில தலைமை கூட்டுறவு வங்கி