குமாரபாளையம்:''நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தஞ்சை வரை செல்லக்கூடிய காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால், பல ஆயிரம் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்,'' என, நாமக்கல் தி.மு.க., - எம்.பி., சின்ராஜ் கூறினார்.
குமாரபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் மற்றும் புறவழிச்சாலையில், நாமக்கல் எம்.பி., சின்ராஜ் ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தஞ்சை வரை செல்லக்கூடிய காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் பல ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இரண்டு மாதம் முன், 45 சாய ஆலைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நடவடிக்கைகள் அதிகாரிகள் சரியாக செய்து உள்ளனரா என ஆய்வு செய்ய வந்ததில், பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சேலம் கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மார்ச் மாத முடிவில் பணி துவங்கும். அதிலிருந்து 7 மாதத்தில் பணிகள் நிறைவு பெறும்.
இவ்வாறு கூறினார்.