உடுமலை:உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான விழிப்புணர்வு முகாம், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ஒடிஷா மாநிலம், புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில், உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று (13ம் தேதி) துவங்குகிறது.
இந்த போட்டியை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பிரபலப்படுத்த, 'ஹாக்கி இந்தியா' அமைப்பு சார்பில், முகாம் நடத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஹாக்கி முகாம் நடந்தது. பள்ளித்தலைமையாசிரியர் அப்துல்காதர் தலைமை வகித்தார்.
உதவி தலைமையாசிரியர்கள் திருமூர்த்திராஜன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் பயிற்சியாளராக விளையாட்டு நுணுக்கங்களையும், உலக கோப்பை ஹாக்கி போட்டி குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். இறுதியில், மாணவர்களுக்கு, ஹாக்கி இந்தியா அணியின் டி-சர்ட்கள் வழங்கப்பட்டன.