வால்பாறை:காடம்பாறையில் பழங்குடியின மக்களுக்கு, பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை, வெள்ளிமுடி, கீழ்பூனாஞ்சி, காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு, 'திருப்பூர் காமன் இந்தியன்' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில்,பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். விழாவில், அட்டகட்டி உதவி வனப்பாதுகாவலர் செல்வம் கலந்து கொண்டு, 200க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு, அரிசி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வழங்கினார்.
வனப்பகுதியில், பாதுகாப்பான முறையில் பொங்கல் விழா கொண்டாட வேண்டும், என, பழங்குடியின மக்களை வனத்துறையினர் அறிவுறுத்தினர். விழாவில், செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த மூப்பன்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.