துாத்துக்குடி:'ஆன்லைன் ரம்மி' விளையாட்டில் லட்சக்கணக்கில் பணம் இழந்த இன்ஜினியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துாத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாலன், 30; இன்ஜினியரான இவர், துாத்துக்குடியில் கப்பல் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட இவர், சமீபத்தில், 3 லட்சம் ரூபாய் இழந்தார். நேற்று முன்தினமும் பணத்தை இழந்ததால் மனமுடைந்த பாலன், நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தட்டப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.