உடுமலை:உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், திருவள்ளுவர் திருநாள் விழா, வரும் 21ம் தேதி குட்டைத்திடலில் நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில், சினிமா நடிகர் செல்லத்துரை, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் தொகுப்பாசிரியர் பிரகாஷ், எம்.பி., சண்முகசுந்தரம், எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் நுால் வெளியீட்டு விழா நடக்கிறது. மேலும், காரத்தொழுவு, கணக்கம்பாளையம், சின்னவீரம்பட்டி, உடுக்கம்பாளையம் அரசு பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலை வழங்கப்படுகிறது.