புதுடில்லி வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், வரும் நாட்களில், 'மைனஸ் 4 டிகிரி செல்ஷியஸ்' வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புதுடில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த 23 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மிக மோசமான குளிர், புதுடில்லியில் சமீபத்தில் பதிவானது.
![]()
|
நேற்றைய நிலவரப்படி புதுடில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை, 9.3 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது. இந்நிலையில், வரும் வாரங்களில் வட மாநிலங்களின் குளிர் வரலாறு காணாத வகையில் வாட்டி வதைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, 'லைவ் வெதர் ஆப் இந்தியா' என்ற தனியார், 'ஆன்லைன்' வானிலை மைய நிறுவனர் நவ்தீப் தாஹியா கூறியிருப்பதாவது:
வரும் 14 - 18 வரையில், வட மாநிலங்களில் இதுவரை இல்லாத கடும் குளிர் நிலவும். குறிப்பாக 16 - 18 வரையிலான காலகட்டத்தில், மைனஸ் 4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement