அனுப்பர்பாளையம்:திருப்பூர், பாத்திர தொழிலாளர் புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து, பேச அழைப்பு விடுத்து, பாத்திர அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில், உற்பத்தியாளர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதற்கு எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் தரப்பில், பழைய சம்பள ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பது, ஒரு வருடம் கழித்து புதிய சம்பளம் குறித்து பேசி கொள்வது என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளாமல், தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாக குழு கூட்டம் நேற்று சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் துரைசாமி, தலைமை வகித்தார். செயலாளர் கதீரேசன், முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன், வரவேற்றார். 23ம் தேதி புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து, தொழிற்சங்க கூட்டு கமிட்டியிடம் பேச்சு வார்த்தை நடத்துவது, அதற்கான கடிதத்தை தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.