நயினார்கோவில்:பரமக்குடி அருகே நயினார்கோவில் ரோட்டில் நடந்த டூவீலர் விபத்தில் திருமணத்திற்கு பத்து நாட்களே உள்ள நிலையில் புதுமாப்பிள்ளை பலியானார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அ.புதூர் கிராமத்தை சேர்ந்த பீட்டர் மகன் அலெக்ஸ்சாண்டர் 26. பரமக்குடி மணிநகர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். இவருக்கு ஜன.23ல் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக அலெக்ஸ்சாண்டர் நயினார் கோவில் சென்றுவிட்டு டூவீலரில் 'ஹெலமெட்' அணியாமல்' நேற்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
நயினார்கோவில் ரோடு அண்டக்குடி சந்திப்பில் சென்ற போது எதிரில் வந்த மண் அள்ளும் இயந்திரம் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அலெக்ஸ்சாண்டர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் இறந்தார்.