பல்லடம்:பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த விழாவுக்கு, நகர தலைவர் வடிவேலன் தலைமை வகித்தார். நகர இளைஞரணி தலைவர் சந்தான கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
விவேகானந்தர் உருவப் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ்குமார், நகராட்சி வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி, நிர்வாகிகள் செல்வராஜ், திலீப் குமார், ரமேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.