கோவை;வேளாண் பல்கலை மாணவர் நல மையத்தில், இளநிலை இறுதியாண்டு படிக்கும், அனைத்து பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது; துணைவேந்தர் கீதாலட்சுமி, முகாமை துவக்கி வைத்தார். 'கருடா ஏரோஸ்பேஸ்' நிறுவன பயிற்சி பிரிவு தலைவர் ஜேய்ஸ் சொர்தியா டிரோன் செயல்பாடுகள், பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
மாணவர்களின் திறன்கள் பரிசோதிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி இணை பொது இயக்குனர் அகர்வால், மாணவர்கள் நல மைய டீன் மரகதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.