தி.மு.க., கவுன்சிலர் கொலை மிரட்டல் வருவாய் ஆய்வாளர் போலீசில் புகார்

Added : ஜன 13, 2023 | |
Advertisement
வேலுார்:அலுவலகத்தில் புகுந்து, வருவாய் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாக, தி.மு.க., கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.வேலுார் மாவட்டம், செதுவாலையைச் சேர்ந்தவர் யுவராஜ், 32; சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர். வேலுார் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர், 40; வேலுார் மாநகராட்சி, 24வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.இவர், சத்துவாச்சாரி மதிநகரில் உள்ள தன் நிலத்தில் செங்கல்

வேலுார்:அலுவலகத்தில் புகுந்து, வருவாய் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாக, தி.மு.க., கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேலுார் மாவட்டம், செதுவாலையைச் சேர்ந்தவர் யுவராஜ், 32; சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர். வேலுார் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர், 40; வேலுார் மாநகராட்சி, 24வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.

இவர், சத்துவாச்சாரி மதிநகரில் உள்ள தன் நிலத்தில் செங்கல் சூளை வைத்துள்ளார்.

இதற்காக, அலமேலுமங்காபுரத்தில் இருந்து மண் எடுத்து, செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதாக வருவாய்த் துறைக்கு புகார் சென்றது.

இது குறித்து விசாரிக்க, சத்துவாச்சாரி கிராம உதவியாளர் சுபாஷ் சந்திரபோஸ் நேற்று முன்தினம் மதிநகர் சென்று, அங்கு நடக்கும் பணிகளை பார்வையிட்டு, செங்கல் சூளையை மொபைல்போனில் படம் எடுத்துள்ளார்.

இதையறிந்த கவுன்சிலர் சுதாகர், சத்துவாச்சாரி ஆர்.ஐ., அலுவலகம் சென்று, 'என் அனுதியின்றி எப்படி புகைப்படம் எடுக்கலாம்' என, யுவராஜிடம் ஆவேசமாக பேசி தகராறு செய்தார்.

இது குறித்து, யுவராஜ் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதில், 'சுதாகர் என் அலுவலகம் வந்து, என்னை பணி செய்ய விடாமல் தடுத்து, ஒருமையில் பேசி, என்னை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்' என, குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, தி.மு.க., கவுன்சிலர் சுதாகர் மீது, சத்துவாச்சாரி போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன் மீது பொய் வழக்கு போடுவதற்கான முயற்சி நடக்கிறது; அதை தடுத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, சுதாகர் எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று, 'ஆன்லைன்' வழியே புகார் அனுப்பி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X