கோவை:சொத்துப்பதிவின்போது, உரிய முத்திரைத்தாள் செலுத்தாதவர்கள், வரும், 31ம் தேதிக்குள், முத்திரை தீர்வையை செலுத்தி, ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம்.
கோவை மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) செல்வசுரபி வெளியிட்ட அறிக்கை:
கோவை வருவாய் மற்றும் பதிவு மாவட்டங்களை உள்ளடங்கிய, 17 சார்பதிவகத்தில், பதிவு செய்து குறைவு முத்திரைத்தீர்வை செலுத்தாததால், ஆவணங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை கிரையதாரர்கள் விடுத்துக்கொள்ளும் வகையில், 31ம் தேதி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில், கிரையதாரர்கள் தாங்கள் நிலுவையில் வைத்துள்ள, முத்திரை தீர்வையை செலுத்தி, ஆவணங்களை விடுவித்துக்கொள்ளலாம். கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை), பொள்ளாச்சி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, பொள்ளாச்சி கோட்டம் தனி வட்டாச்சியரை தொடர்பு கொண்டு, இச்சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.