புதுடில்லி: டில்லி -புனே செல்லும் விமானத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
புதுடில்லி விமான நிலையத்திலிருந்து புனே செல்லும் தனியார் விமானம் நேற்று இரவு புறப்படத்தயாராக இருந்தது. அப்போது வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். விமான புறப்பாடு நிறுத்தப்பட்டதுஉ
இதையடுத்து சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் டில்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விமானத்தை சோதனையிட்டனர். வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை. எனினும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வதந்தியை கிளப்பிய நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.