போத்தனுார்:ராமநாதபுரம் அடுத்துள்ள நாராயணன் தோட்டத்தில், விவசாயிகள் சங்கம் (ஜாதி, மதம், கட்சி சார்பற்றது) மாதாந்திர கூட்டம், மாநில பொது செயலாளர் கந்தசாமி தலைமையில் நடந்தது. விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
'கோவை வனக்கோட்டம் மற்றும் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சோமையம்பாளையம் ஆகிய கிராமங்களில், அறிவிக்கப்பட்ட யானை வழித்தடங்கள் எதுவும் கிடையாது என, தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களுக்கு, மாவட்ட வன அலுவலர் பதிலளித்துள்ளார். ஆனால், யானை வழித்தடம் உருவாக்கும் வகையில் தமிழக அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது. இம்முயற்சியை கைவிட வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம், தமிழக அரசின் தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டது.