தொழிலாளி கொலை :போலீசார் விசாரணை

Added : ஜன 13, 2023 | |
Advertisement
செட்டிபாளையம்:செட்டிபாளையம் அருகே உள்ள பெரிய குயிலி பகுதியில் இருந்து இடையர்பாளையம் செல்லும் வழியில் இடும்பன் கோவில் மற்றும் வனப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் காலை பெரியகுயிலி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த டிரைவர் முருகேசன், 28, நண்பர்களான சந்தோஷ், துரைராஜ் ஆகியோருடன் மது குடிக்க மேற்குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றார். கை, கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்ட

செட்டிபாளையம்:செட்டிபாளையம் அருகே உள்ள பெரிய குயிலி பகுதியில் இருந்து இடையர்பாளையம் செல்லும் வழியில் இடும்பன் கோவில் மற்றும் வனப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் காலை பெரியகுயிலி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த டிரைவர் முருகேசன், 28, நண்பர்களான சந்தோஷ், துரைராஜ் ஆகியோருடன் மது குடிக்க மேற்குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றார். கை, கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், ஒரு வாலிபர் சடலம் சிதைந்த நிலையில் கிடப்பதை பார்த்தனர். செட்டிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தென்னம்பாளையம் விசாகா நகரில் வசிக்கும், பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த மாயாதேவி, தனது கணவர் லாலம் கேவட், 36, கடந்த, 8ம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பாததால், பல இடங்களிலும் தேடி வந்துள்ளார். சடலம் குறித்து தகவலறிந்து, மருத்துவமனைக்கு சென்று, தனது கணவர் என்பதை உறுதி செய்தார். செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, கொலை செய்தவர்களை தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X