சட்டசபையில் நடந்தது என்ன ? இன்று டில்லி சென்று விளக்கமளிக்கிறார் கவர்னர்

Updated : ஜன 13, 2023 | Added : ஜன 13, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: தமிழக கவர்னர் இன்று டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து விளக்கமளிக்கிறார். தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தியபோது நடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் பாலு, ராஜா, இளங்கோ, வில்சன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவினர், நேற்று ஜனாதிபதி
இன்று டில்லி , கவர்னர் ரவி

புதுடில்லி: தமிழக கவர்னர் இன்று டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து விளக்கமளிக்கிறார்.




தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தியபோது நடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் பாலு, ராஜா, இளங்கோ, வில்சன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவினர், நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தனர்.
அப்போது 'சீலிடப்பட்ட கவர்' ஒன்றை ஜனாதிபதியிடம் அளித்தனர்.


latest tamil news



இந்நிலையில், கவர்னர் ரவி இன்று காலை 11:20 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' பயணியர் விமானத்தில், சென்னையில் இருந்து புதுடில்லி செல்கிறார். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்த தகவல்களை தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை இரவு 8:15 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (9)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-202311:41:22 IST Report Abuse
venugopal s சரி சரி, அடுத்த ஆளுநரை தயார் பண்ணுங்கப்பா!
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
13-ஜன-202308:45:14 IST Report Abuse
Sankar Ramu கவர்னர் உரை என்பதே அரசின் ஆட்சிக்கு ரேங்க் கார்டு மாதிரி . இதை கவர்னர் தான் சொந்தமாக செய்யணும் .... அதுகூட தெரியாம இங்க முதல்வர்
Rate this:
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
13-ஜன-202308:44:15 IST Report Abuse
Gokul Krishnan சுடாலின் குடும்பம் பலே குடும்பம் ராகுல் டெல்லி பாத யாத்திரை சீரியலுக்கு கனிமொழி மட்டும் பங்கேற்பு ஆனால் ஆளுநர் மீதான புகார் மனுவை குடியரசு அளிக்கும் போது டி ஆர் பாலு தலைமையில் அக்கா மிஸ்ஸிங்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X