சட்டசபையில் நடந்தது என்ன ? இன்று டில்லி சென்று விளக்கமளிக்கிறார் கவர்னர் | What happened in the assembly? Governor Ravi will go to Delhi today to explain | Dinamalar

சட்டசபையில் நடந்தது என்ன ? இன்று டில்லி சென்று விளக்கமளிக்கிறார் கவர்னர்

Updated : ஜன 13, 2023 | Added : ஜன 13, 2023 | கருத்துகள் (9) | |
புதுடில்லி: தமிழக கவர்னர் இன்று டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து விளக்கமளிக்கிறார். தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தியபோது நடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் பாலு, ராஜா, இளங்கோ, வில்சன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவினர், நேற்று ஜனாதிபதி
இன்று டில்லி , கவர்னர் ரவி

புதுடில்லி: தமிழக கவர்னர் இன்று டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து விளக்கமளிக்கிறார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தியபோது நடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் பாலு, ராஜா, இளங்கோ, வில்சன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவினர், நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தனர்.
அப்போது 'சீலிடப்பட்ட கவர்' ஒன்றை ஜனாதிபதியிடம் அளித்தனர்.


latest tamil newsஇந்நிலையில், கவர்னர் ரவி இன்று காலை 11:20 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' பயணியர் விமானத்தில், சென்னையில் இருந்து புதுடில்லி செல்கிறார். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்த தகவல்களை தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை இரவு 8:15 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X