பாசுமதி அரிசிக்கு தரக்கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு| Quality Control for Basmati Rice: Central Government Action Announcement | Dinamalar

பாசுமதி அரிசிக்கு தரக்கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Added : ஜன 13, 2023 | |
புதுடில்லி: பாசுமதி அரிசியில் கலப்படத்தை தவிர்க்கவும், அதன் தரத்தை உறுதி செய்யவும், பல்வேறு தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளை மத்திய அரசு விதித்துள்ளது.பாசுமதி அரிசி விற்பனையில் அதிக லாப நோக்கத்தில் பல்வேறு கலப்படங்கள் நடப்பதாக புகார்கள் குவிகின்றன. பாசுமதி அரிசியுடன் வேறு வகை தரமற்ற அரிசியை கலப்பது, சில செயற்கை மூலப்பொருட்கள் வாயிலாக அதன் நிறத்தை மாற்றுவது
FSSAI, Basmati rice, Central food regulator, பாசுமதி அரிசி, தரக்கட்டுப்பாடு, மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி: பாசுமதி அரிசியில் கலப்படத்தை தவிர்க்கவும், அதன் தரத்தை உறுதி செய்யவும், பல்வேறு தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளை மத்திய அரசு விதித்துள்ளது.

பாசுமதி அரிசி விற்பனையில் அதிக லாப நோக்கத்தில் பல்வேறு கலப்படங்கள் நடப்பதாக புகார்கள் குவிகின்றன. பாசுமதி அரிசியுடன் வேறு வகை தரமற்ற அரிசியை கலப்பது, சில செயற்கை மூலப்பொருட்கள் வாயிலாக அதன் நிறத்தை மாற்றுவது உட்பட பல கலப்பட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல்வேறு தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளை மத்திய அரசு முதல்முறையாக வகுத்துள்ளது. இதன்படி, பாசுமதி அரிசியில் செயற்கை நிறங்கள் மற்றும் மணங்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news

மேலும் பாசுமதி அரிசியின் சராசரி நீளம், சமைத்த பின் நீளும் விகிதம், ஈரப்பதத்தின் அதிகபட்ச வரம்புகள், 'அமிலோஸ்' உள்ளடக்கம், 'யூரிக்' அமிலம், குறைபாடுள்ள அல்லது சேதமடைந்த தானியங்கள் மற்றும் பிற பாசுமதி அல்லாத அரிசிகளின் கலப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

இந்த புதிய தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் ஆக., 1 முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X