திருவண்ணாமலை-திருவண்ணாமலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய, பானி பூரி கடைக்காரரை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 38; திருமணமானவர். இவர், அப்பகுதியில் பானி பூரி கடை நடத்தி வருகிறார்.
இவரிடம், 17 வயது சிறுமி பணியாற்றி வந்தார். அவரை மிரட்டி செந்தில்குமார் அடிக்கடி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்தார். இதில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
சிறுமியின் பெற்றோர் புகார்படி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, செந்தில்குமாரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.