திருக்கனுார்: வாதானுார் சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில், நான்காம் வட்டம் அளவிலான கபடி போட்டி துவக்க விழா நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார்.
திருக்கனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புனிதராஜா கபடி போட்டியை துவக்கி வைத்தார். 4ம் வட்டம் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுதந்திரம் நன்றி கூறினார்.
இப்போட்டியில் 4ம் வட்டம் அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 வயதிற்கு உட்பட்ட 20 ஆண்கள் அணியும், 16 பெண்கள் அணியும் பங்கேற்றுள்ளன. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.