திருக்கனுார்: சோரப்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
திருபுவனை தொகுதி, சோரப்பட்டு கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். அங்காளன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 20 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சமும், ஆண்கள் குழுவில் 4 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதிம் ரூ.20.80 லட்சம் கடன் உதவியை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
விழாவில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், சங்க துணை தலைவர் யுவராஜ், சங்க இயக்குனர்கள் ஆனந்தன், தனபால், சிவராமன், புருஷோத்தமன், முத்துசாமி, மாரிமுத்து, ராமகிருஷ்ணன், சங்க மேலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.