நரிக்குடி-நரிக்குடி வேலாணூரணியில் தோட்டக்கலை துறை சார்பாக, ஊராட்சி தலைவர் அங்காள ஈஸ்வரி பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார்.
வேலாணுாரணி ஊராட்சிக்கு உட்பட்ட வலையபட்டி, அம்மன்பட்டி, உடைய சேர்வைக்காரன்பட்டி கிராமங்களை பசுமையாக மாற்றும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
நரிக்குடி ஒன்றிய துணைத் தலைவர் ரவிச்சந்திரன், தோட்டக்கலை துறை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement