புதுச்சேரி : குருமாம்பட்டு காமராசர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கிராமப்புற இளைஞர், இளம்பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து குரும்பாப்பட்டு, காமராசர் வேளாண் அறிவியல் நிலையத்தில் இருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் விவசாயம் சார்ந்த சுயதொழில் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில், ஆடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் நிதியுதவியோடும், கிராமப்புற இளைஞர்கள், இளம்பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் துவங்கப் பட்டுள்ளது.
ஆர்வமுள்ள 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 25 இளைஞர்கள், இளம்பெண்களை தேர்வு செய்து, தொழில் நுட்ப வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தகுதி அடிப்படையில் முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் வல்லுனர்களோடு தொடர்பு கொண்டு வரும் 20ம் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் ஆதார் அட்டை நகலோடு பதியலாம்.
மேலும் விபரங்கள் பெற 0413 2271292, 2271352 ஆகிய தொலைபேசி எண்களையும், திட்ட உதவியாளர் டாக்டர் சித்ராவை 94890 52304 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.