புதுச்சேரி : புதுச்சேரி வெங்கட்டா நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பாரதியார் கிராம வங்கியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் சாலை, சாரத்தில் பாரதியார் கிராம வங்கி தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் 44 கிளைகளோடு இந்த வங்கி சேவை அளிக்கிறது.
புதுச்சேரி ரெயின்போ நகரில் இயங்கிய பாரதியார் கிராம வங்கி கிளை, விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதையொட்டி, இந்த கிளை வெங்கட்டா நகர், 2வது மெயின் ரோட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் வல்லவன், இந்த பாரதியார் கிராம வங்கி கிளையை திறந்து வைத்தார். வங்கி தலைவர் ரஞ்சித்குமார், பொது மேலாளர் கலைவாணன், கிளை மேலாளர் உமாமகேஸ்வரி உட்பட வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலெக்டர் வல்லவன் பேசுகையில், பாரதியார் கிராம வங்கி மிக குறுகிய காலத்தில் 44 கிளைகளோடு அசூர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வங்கி கிராமப்புற வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்து வருகிறது. அரசு சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது என்றார்.
இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன், அடமான கடன் மற்றும் சிறுதொழில் கடன்கள் வழங்கப்பட்டது.