விருதுநகர்--விருதுநகர் கச்சேரி சாலையில் விவேகானந்தரின் பிறந்த நாள், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பா.ஜ., கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ், இளைஞரணி தலைவர் சிவபாலன் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகாலை 5:00 மணி முதலே குவியத் துவங்கினர். மாரத்தான் போட்டி ரயில்வே பீடர் ரோடு, ராமமூர்த்தி சாலை, அல்லம்பட்டி முக்கு ரோடு, கருமாதிமடம் வழியே மீண்டும் கச்சேரி ரோடு வந்தது.