முள் செடிகள் அகற்றப்படுமா
சாத்துார் வைப்பாற்றில் உள்ள முள் செடிகள் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐயப்பன், சாத்துார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி முள் செடியை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இளவரசன், நகராட்சி கமிஷனர், சாத்துார்.
கட்டடம் சேதம்
காரியாபட்டி டி.வேப்பங்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்துள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ், காரியாபட்டி.
சீரமைக்க நடவடிக்கை
ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதி ஈஸ்வரன், ஊராட்சி தலைவர், டி.வேப்பங்குளம்.
கும்மிருட்டால் அச்சம்
விருதுநகர் மின் அலுவலகம் உள்ள ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு வரை தெருவிளக்குகள் எரியாமல் கும்மிருட்டாக உள்ளது. பெண்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.
ராம், விருதுநகர்.
எரிய நடவடிக்கை
தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்டான்லி பாபு, நகராட்சி கமிஷனர், விருதுநகர்.
மோசமான மயான பாதை
காரியாபட்டி சின்னபுளியம்பட்டி மயான பாதை படுமோசமாக உள்ளது. சீரமைக்க வேண்டும்.
குமார், காரியாபட்டி.
நடவடிக்கை எடுக்கப்படும்
விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலமுருகன் ஊராட்சி தலைவர், தோணுகால்.
ரோடு சேதம்
விருதுநகர் ஒன்றியம் குந்தலப்பட்டியில் ரோடு சேதமடைந்துள்ளது. வாறுகாலுக்கு தடுப்புச்சுவர் வேண்டும்.
கன்னியப்பன், குந்தலப்பட்டி.
ரோடு வசதி செய்யப்படும்
விரைவில் ரோடு, வாறுகால் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
பாண்டிலட்சுமி, ஊராட்சி தலைவி, குந்தலப்பட்டி.
பாதாளசாக்கடை மூடியால் விபத்து அபாயம்
ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை மூடிகள் அருகே ஏற்பட்டுள்ள சிறு பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தி வருகிறது. சரி செய்ய வேண்டும்.
ராமகிருஷ்ணன், ராஜபாளையம்.
சரி செய்ய நடவடிக்கை
ஒப்பந்ததாரர்களிடம் கூறி மூடி அருகே ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களை சமப்படுத்த அறிவுறுத்தப்படும்.
பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர், ராஜபாளையம்.
ரோடால் அவதி
சிவகாசி தெற்கு ரத வீதியில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சீரமைக்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கணேசன், சிவகாசி.
சீரமைக்கப்படும்
ரோடு விரைவில் சீரமைக்கப்படும்.
கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர், சிவகாசி.
சென்டர் மீடியன் தேவை
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா முதல் பி.ஏ.சி.ஆர்., சிலை வரை இருந்த சென்டர் மீடியன்கள் சாலை பராமரிப்பு பணியின் போது அகற்றப்பட்டு விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சிவராமன், ராஜபாளையம்.
நடவடிக்கை எடுக்கப்படும்
நிர்வாகத்தின் அனுமதி பெற்று சென்டர் மீடியன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
லாவண்யா, டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர், ராஜபாளையம்.
தெருவிளக்குகள் பழுது
சத்திரப்பட்டி நியூ காலனியில் தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், சத்திரப்பட்டி.
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அனைத்து தெருவிளக்குகளையும் சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனகராஜ், ஊராட்சி தலைவர், சத்திரப்பட்டி.
சேதமடைந்த ரோடு
சிவகாசி சித்துராஜபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது.
முத்து, சித்துராஜபுரம்.
சரி செய்யப்படும்
ரோடு சீரமைப்பது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்படும்.
லீலாவதி, ஊராட்சி தலைவர், சித்துராஜபுரம்.