விருதுநகர்--விருதுநகர் கன்னிச்சேரிபுதூர் ஊராட்சியில் ரூ.35 லட்சம் முறைகேடு தொடர்பாக தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் கவிதா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார்.
கன்னிச்சேரிபுதூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவரின் கணவர் மோதல் ஆடியோ வெளியானது. இதையடுத்து ஊராட்சி இணை இயக்குனர் தலைமையில் தணிக்கை நடந்தது.
இதில் கொரோனா தடுப்பு பணியில் முககவசம், கபசுரக்குடிநீர், கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடருக்கு ரூ.1.53 லட்சம், வாறுகால் கழிவு மண் அகற்ற ரூ. 28 ஆயிரம், தெருவிளக்கு உபகரணம், போர்வெல் புதிய மோட்டார் வாங்க ரூ. 98 ஆயிரம், மேல்நிலை தொட்டி சுத்தம் செய்தல், குப்பை அகற்ற, புல்வெளி தூய்மை பணி, பாலம் சரிசெய்தல் என பல பணிகளின் பேரில் 17 பதிவேடுகளை பராமரிக்காமல் காசோலை அதிகாரத்தை பயன்படுத்தி ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் ரூ.35 லட்சம் வரை முறைகேடாக செலவு செய்தது தெரிந்தது.
இது குறித்து தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் கவிதா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.