புகையிலை பறிமுதல்
சிவகாசி: காமராஜர் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் 38, தட்டு மேட்டு தெரு பகுதியில் டூவீலரில் தடை புகையிலை விற்பனை செய்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து, ரூ. 3000 மதிப்பிலான புகையிலை பொருட்கள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.
* காந்தி நகரைச் சேர்ந்த மணிகண்டராஜன் 30, கருவாட்டு கடை முக்கு பகுதியில் டூ வீலரில் தடை புகையிலை விற்பனை செய்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து, ரூ.5334 மதிப்பிலான புகையிலை பொருட்கள், டூ வீலரை பறிமுதல் செய்தனர்.
காது அறுப்பு
சாத்துார்: சாத்துார் ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ், 30. அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பனிடம் கூலிக்கு ஆடு மேய்த்து வருகிறார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு காளிராஜ் வீட்டில் தூங்கினார். கோபமடைந்த மாரியப்பன், காளிராஜ்ன் இடதுகாதை கத்தியால் அறுத்தார்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.