முதுகுளத்தூர்,--முதுகுளத்தூர் கமுதி சாலையில் பேரூராட்சி அலுவலகம் அருகே கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சாலையோரம் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்தூர்- கமுதி ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் அருகே இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாய்க்கு செல்கிறது. மேலும் ரோட்டோரம் குளம்போல் தேங்குகிறது.
பல மாதங்களாக உடைப்பை சரி செய்யாததால் வழியோர கிராமங்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. முதுகுளத்தூர்-கமுதி செல்லும் முக்கிய சாலை என்பதால் வாகனங்கள் அதிகமாக செல்வதால் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டு, இரவு நேரங்களில் விபத்து அபாயம் உள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.