திருவாடானை,-தொண்டி அருகே காரங்காட்டில் சென்னை மத்திய உவர் நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில் நுட்ப துறை நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர் நீர் மீன் வளர்ப்பு முறை திட்டத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய முறையிலான கடற்பாசி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மீனவ பெண் தொழில் முனைவோர் சுகந்தி, கடற்பாசி வளர்ப்பு அனுபவம் குறித்து பேசினார். இணை அலுவலர் ஜெயபவித்ரன் பாசி வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். களப்பணியாளர் தேவநாதன், காரங்காடு ஊராட்சி தலைவர் கார்கோல்மேரி மற்றும் கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர்.