ராமநாதபுரம்-தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு 'ட்ரோன்' கருவியை இயக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வேளாண் துறையில் ட்ரோன் தொழில் நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்களை விவசாய நிலங்களில் தெளிக்க மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம் மூலம் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாஸ்போர்ட், டாக்டரின் உடல் தகுதி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். இப்பயிற்சியானது கல்வி வளாகம், விவசாய நிலத்தில் 10 நாட்கள் அளிக்கப்படும். இதற்காக ரூ.61,100 தாட்கோ மூலம் வழங்கப்படும்.
விவசாய ட்ரோன்கள் வாங்க வேளாண் துறையில் மானியத்துடன் கடன், தாட்கோ மூலம் வங்கி கடன் பெறலாம். 18 முதல் 45 வயதிற்குள் உள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.