ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயலில் தாழை மடல் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பவுர்ணமி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலுக்கு ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து செல்லும் 3 கி.மீ., ரோடு குண்டும், குழியுமாக உள்ளது.
லேசான மழை பெய்தாலே ரோடு சேறும் சகதிமாகிவிடுவதால் பக்தர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.