கூட்டுறவு வங்கியில் ரூ.2.61 கோடி கொள்ளை; சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

Added : ஜன 13, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ், சென்னை பாரிமுனையில், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைமையகம் செயல்படுகிறது. இந்த வங்கிக்கு, நவம்பரில் மர்ம நபர்கள், 'இ - மெயில்' ஒன்றை அனுப்பினர். வரவு செலவு தொடர்பாக ஏதோ தகவல் வந்திருப்பதாக வங்கி அதிகாரிகள், அந்த இ - மெயிலை திறந்தனர். அதன்பின், வங்கி கணக்கில் இருந்து, 2.61 கோடி ரூபாய் கொள்ளை போனது.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள்,
crime, police, arrest, crime round up, கிரைம், போலீஸ், கைது

தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ், சென்னை பாரிமுனையில், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைமையகம் செயல்படுகிறது. இந்த வங்கிக்கு, நவம்பரில் மர்ம நபர்கள், 'இ - மெயில்' ஒன்றை அனுப்பினர். வரவு செலவு தொடர்பாக ஏதோ தகவல் வந்திருப்பதாக வங்கி அதிகாரிகள், அந்த இ - மெயிலை திறந்தனர். அதன்பின், வங்கி கணக்கில் இருந்து, 2.61 கோடி ரூபாய் கொள்ளை போனது.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு, 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், 'ஆன்லைன்' வாயிலாக கொள்ளை நடந்து இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை விரிவுபடுத்தப்பட்டது.


தனிப்படை போலீசார், மாநில தலைமை கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர் கணக்குளை ஆய்வு செய்தனர். அதில் இருந்து கொள்ளை நடக்கவில்லை என்பதை உறுதி செய்தனர். ஆனால், அந்த வங்கிக்கு என துவங்கப்பட்டுள்ள கணக்கில் இருந்து, அரசுக்கு சொந்தமான, 2.61 கோடி ரூபாய், 'ஆன்லைன்' வாயிலாக, டில்லியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.


இதுகுறித்து, சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கூறியதாவது: நாங்கள், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, 'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்படும் மோசடி மற்றும் கொள்ளை குறித்து பல்வேறு தகவல்களை திரட்டினோம். அறிவியல் ரீதியான விசாரணையை மேற்கொண்டோம். அப்போது, வங்கி கொள்ளையில் ஈடுபடும், ஹேக்கர்கள், 'கீ லாக்கர்' என்ற மென்பொருளை பயன்படுத்தி வருவது தெரிய வந்தது.


மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளைக்கு, இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்தோம். ஹேக்கர்கள், நவ., 18ல், வங்கி கணக்கில் ஊடுருவி உள்ளனர். ஆக.,12 வரை, அந்த வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது; அதன் வரவு செலவு குறித்து கண்காணித்து உள்ளனர். ஒரே நாளில், காலை, 6:00 - 9:00 மணி வரை, 41 முறை, 2.61 கோடி ரூபாயை கொள்ளையடித்து உள்ளனர். இந்த பணத்தை, 32 வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தி உள்ளதை உறுதி செய்தோம். இதையடுத்து, டில்லியில் முகாமிட்டோம். அங்கு, ஜவுளி வியாபாரிகள் போல வேடமிட்டு, தகவல்களை திரட்டினோம்.


மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த, நைஜீரியாவை சேர்ந்த எக்கேன் காட்வின், 37, அகஸ்டின், 42, ஆகியோர் உத்தம் நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு அறை எடுத்து தங்கி, இருவரையும் பிடித்து விசாரித்தோம். குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களை கைது செய்து, சென்னையில் உள்ள சிறையில் அடைத்துள்ளோம். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, 15 வங்கிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, 1.05 கோடி ரூபாயை மீட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.'வீடியோ' எடுத்து பெண்ணை மிரட்டி பலாத்காரம்: இருவர் கைது


சேலம், அழகாபுரத்தைச் சேர்ந்த, 20 வயது பெண், நேற்று முன்தினம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்: சேலம் மத்திய சிறையில் வார்டன்களாக பணிபுரியும் இருவர், சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாதுகாப்பு வழங்கினர். அங்கு நான் சிகிச்சைக்கு சென்ற போது, அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறை வளாக குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, என்னை பலாத்காரம் செய்தனர். அப்போது 'போட்டோ, வீடியோ' எடுத்தனர். அதை வைத்து மிரட்டி, என்னை தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இதையடுத்து, உதவி கமிஷனர் லட்சுமிபிரியா தலைமையில் போலீசார் விசாரித்தனர்.


போலீசார் கூறியதாவது: மத்திய சிறை வார்டன்களாக பணிபுரியும், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரைச் சேர்ந்த அருண், 30, சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர், 31, ஆகியோர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். சிறைக் காவலர் குடியிருப்பில் சிவசங்கர் குடும்பத்துடனும், அருண் தனியாகவும் வசிக்கின்றனர். இவர்கள், அந்த பெண்ணிடம், சமூக வலைதளங்கள் மூலம் பழக்கத்தை தொடர்ந்தனர். இதன் மூலம் அந்த பெண்ணை, சிறைக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, அங்கு காலியாக உள்ள வீட்டில், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


அப்போது வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வார்டன் இருவருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். புகார் அளித்த பெண், ஓமலுாரில், 2017ல் 'பஸ் டிரைவர், கண்டக்டரால்' கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.சிறுமி கர்ப்பம்: கடைக்காரர் கைது


திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 38; திருமணமானவர். இவர், அப்பகுதியில் பானி பூரி கடை நடத்தி வருகிறார். இவரிடம், 17 வயது சிறுமி பணியாற்றி வந்தார். அவரை மிரட்டி செந்தில்குமார் அடிக்கடி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்தார். இதில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.


சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, செந்தில்குமாரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.ரயிலுக்கு குண்டு மிரட்டல்; பழ வியாபாரி கைது


கடந்த, 9ல் கோவை - மதுரை 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அந்த ரயில், மதுரை வந்தவுடன் வெடிக்கும் எனவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தெரிவித்தார். ரயிலில் சோதனை நடத்தியபோது, அது புரளி என தெரிந்தது. விசாரணையில், மிரட்டல் விடுத்தவர், மதுரை மாவட்டம், மேலுார் வெள்ளலுாரைச் சேர்ந்த போஸ், 37, எனத் தெரிந்தது. அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


latest tamil news

போலீசார் கூறுகையில், 'தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்யும் போஸ், 'சீட்' பிடிக்கும் போது, சக பயணியருடன் தகராறில் ஈடுபட்டார். தன்னிடம் தகராறு செய்தவர்களை போலீசில் சிக்க வைக்க, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்' என்றனர்.பா.ம.க., நிர்வாகி கொலை; ஒரே குடும்பத்தில் ஐவர் கைது


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரம், மேலானமேட்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம், 51; பா.ம.க., பேரூர் நகர முன்னாள் தலைவரான அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தில், குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார். அந்த நிலத்திற்கு குத்தகையை முறையாக செலுத்தாததால், நிலத்தின் உரிமையாளர், தன் நிலத்தை, ராஜேந்திரன், 55, என்பவரிடம் விற்பனை செய்து விட்டார்.


இதனால், ராஜேந்திரனுக்கும், திருஞானசம்பந்தத்திற்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்டில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ராஜேந்திரனும், அவரது மகன்களும் திருஞானசம்பந்தத்தை தாக்கி கொலை செய்ய முயன்றனர். இது குறித்து, சோழபுரம் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரன் அவரது மகன்கள் உள்ளிட்டோரை கைது செய்தனர். சமீபத்தில், அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.


இந்நிலையில், கடந்த, 10ம் தேதி காலை, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த திருஞானசம்பந்தத்தை, ராஜேந்திரனும், அவரது மகன்களும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தலைமறைவாகினர். இந்நிலையில், அணைக்கரை பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரன், 18 வயதுக்கு உட்பட்ட இரண்டு மகன்கள், மகள் விஷ்ணுப்பிரியா, 23, அவரது கணவர் ராஜா, 26, ஆகிய ஐந்து பேரையும், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மாலியில் பயங்கரவாத தாக்குதல் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்


மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், நேற்று நாட்டின் பல பகுதிகளில், அல் - குவைதா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (5)

DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-ஜன-202302:50:28 IST Report Abuse
DARMHAR சில குற்றவாளிகள் இயல்பு என்னவென்றால். ஒரு தலை மயிரை பிய்த்து யானையைக்கட்டி இழுத்தால் யானை வரட்டும். இல்லை என்றால் மயிர் தானே மயிர் தானே போகும் பரவாயில்லை என்ற நோக்குடன் மூடத்தனமாக செயல் படுபவர்கள்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-ஜன-202310:25:01 IST Report Abuse
தமிழ் மைந்தன் கூட்டுறவு வங்கியில் கொள்ளை, அது கம்பெனியும் உடந்தையாக இருக்க
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஜன-202309:52:13 IST Report Abuse
DARMHAR போலீசு இவனை முட்டிக்கு முட்டி லத்தியால் தட்டி குற்றப்பதிவு செய்து சிறையில் அடைத்து கேஸ் பதிவு செய்து நீதி அரசர் முன் விசாரணைக்கு நிறுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X