முதுகுளத்தூர்,-சாயல்குடி அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் சுதாகனி. அரசு பஸ்சில் ஏறிய போது டிரைவர் கவனக்குறைவால் ஏறுவதற்கு முன் பஸ்சை இயக்கியதால் சக்கரத்தில் சிக்கி சுதாகனிக்கு கால் முறிவு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட சுதாகனி தனக்கு இழப்பீடு வழங்க கோரி முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2021 ஆக.18ல் பாதிக்கப்பட்ட சுதாகனி ரூ. 6 லட்சத்து ௩ ஆயிரத்து ௯௧௬ வழங்க முதுகுளத்துார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை வழங்காமல் கால தாமதம் செய்தது.
உத்தரவு நிறைவேற்றுதல் மனு அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஊழியர் பாண்டி, வழக்கறிஞர் வேலுச்சாமி உட்பட பணியாளர்கள் முதுகுளத்தூர் பஸ்ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்து முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்த வேண்டிய தொகையை காசோலையாக செலுத்திய பின் அரசு பஸ்சை நீதிமன்றம் விடுவித்தது.