திருவாடானை-தொண்டி அருகே புதுக்குடி மற்றும் மகாசக்தி நகரை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பாதையை பயன்படுத்துவது சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து நேற்று திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம், தாசில்தார் தமிழ்செல்வி தலைமையில் நடந்தது. இரு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பிரச்னைக்குரிய பாதை, அரசு புறம்போக்கு இடமாக உள்ளது. ஆகவே இரு தரப்பினரும் பாதையை பயன்படுத்த வேண்டாம். இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு பாதையை பயன்படுத்துவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசப்பட்டது.