கமுதி--கமுதி அருகே ஆதனக்குறிச்சியை சேர்ந்தவர் கர்ணன் 34. டிராக்டர் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கோவிலாங்குளம் பஸ்ஸ்டாப் அருகே நின்றிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தன், முனீஸ்வரன் ஆகிய இருவரும் கர்ணனிடம் டிராக்டர் வாங்குவது குறித்து பேசினர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கர்ணனை தகாத வார்த்தையால் பேசி கோவிந்தன், முனீஸ்வரன் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவிலாங்குளம் எஸ்.ஐ., நாகநாதன் வழக்கு பதிந்து கோவிலாங்குளம் கோவிந்தன் 42, முனீஸ்வரன் 30, இருவரை கைது செய்தனர்.