ஆர்.எஸ்.மங்கலம்-உப்பூர் அருகே மோர்ப்பண்ணையில் கடல் உள்வாங்கியதால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே மோர்ப்பண்ணை கடல் நேற்று அதிகாலை முதல் மதியம் 12:30 மணி வரை உள்வாங்கி காணப்பட்டது. கிழக்கு கடற்கரையோர முக்கிய மீனவர் கிராமங்களான திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று கடல் நீர் குறிப்பிட்ட தொலைவிற்கு உள்வாங்கி மீண்டும் இயல் நிலைக்கு வந்தது.
இதனால் இரவில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகுகளை கரைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடல் நீர் உள்வாங்குவதும், மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதும் எங்களைப் பொறுத்த வரை சாதாரணமாக நடைபெறும் நிகழ்வு. காற்றின் சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்ட காரணங்களாலும் கடல் உள்வாங்க கூடும், என்றனர்.