நினைவு ஸ்துாபியில் மலர் அஞ்சலி
சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று உலக தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பியவர் முதன் முதலாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் பேசினார். அவ்விடத்தில் அவரது நினைவாக ஸ்துாபி அமைத்து வாரந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நேற்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, வார வழிபாட்டு குழு சார்பில் ஸ்துாபியில் மலர் துாவி மரியாதை செய்து வழிபட்டனர்.
பொதுமக்களுக்கு காலண்டர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாட்டு ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மணி, டாக்டர் மனோஜ்குமார், பா.ஜ., மாவட்ட பொருளாளர் தரணி முருகேஷன், ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், ஞானதீப சங்கம் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் சிங்காரதோப்பு சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் இளைஞர் தின விழாவில் பட்டிமன்றம், கட்டுரை போட்டிகள் நடந்தது. தாளாளர் மனோகரன் மார்ட்டின் பரிசுகளை வழங்கினார். முதல்வர் ஆனந்த், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
உச்சிபுளி
நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்தாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். தியான கூடத்தில் சிறப்பு பிரார்த்தனை, சொற்பொழிவுகள் நடந்தன.
மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் ராமகிருஷ்ணமடத்திலும் சுவாமி தர்மகரானந்தா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை, சொற்பொழிவு நடந்தது, பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
பரமக்குடி
பரமக்குடி நகர் பா.ஜ., இளைஞரணி சார்பில் நடந்த விழாவிற்கு நகர் இளைஞரணி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நகர் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் பிரவீன் குமார் வரவேற்றார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், சங்கர், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் சுஜித் பர்மாலா, விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கவி பிரகாஷ், மாவட்ட துணை தலைவர்கள் குமார், கேசவன், மகளிர் அணி செல்வராணி பங்கேற்றனர்.
பரமக்குடியில் வைகை ஆறு குமரன் படித்துறை எனப்படும் தற்போதைய நகராட்சி அலுவலகம் முன்பு விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பெரியபட்டினம்
பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் 'இன்று இளைஞர்களுக்கு சமூக வலை தளங்கள் பாதகமா, சாதகமா,' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், 'இன்று இளைஞர் கையில் தான் எதிர்கால இந்தியா இருக்கிறது,' என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடந்தது.
நடுவராக நம்புகமலி இருந்தார். சொற்பொழிவில் லூப்ரின் பானு பேசினார். கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமை வகித்தார்.
முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் காளீஸ்பிரபு வரவேற்றார். உதவி பேராசிரியர் அமிர்தராணி நன்றி கூறினார்.