பழநி கோவிலில் எந்த முறையில் கும்பாபிஷேகம்?

Added : ஜன 13, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
''பழநி கோவிலில் வரும், 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகளுக்குட்பட்டு வேதமும், தமிழ் மூல மந்திரமும் ஓதப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அரசு கொறடா கோவி செழியன்: திருவிடைமருதுார் தொகுதி, நாச்சியார் கோவில் பகுதியில் உள்ள ராமநாதசுவாமி
Palani, Arulmigu Dhandayuthapaniswamy Temple, Kumbabhishekam, பழநி கோவில், கும்பாபிஷேகம்

''பழநி கோவிலில் வரும், 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகளுக்குட்பட்டு வேதமும், தமிழ் மூல மந்திரமும் ஓதப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


அரசு கொறடா கோவி செழியன்: திருவிடைமருதுார் தொகுதி, நாச்சியார் கோவில் பகுதியில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் சேகர்பாபு: இக்கோவிலுக்கு, 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, திருப்பணி நடந்து வருகிறது. மூன்று மாதங்களுக்குள் பணி முடித்து, கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

தி.மு.க., - கோவி செழியன்: அமைச்சருக்கு நன்றி. அக்கோவில் மடப்பள்ளியை, கான்கிரீட் கட்டடமாக மாற்றித்தர வேண்டும். அங்கு பயணியர் தங்கும் விடுதி கட்டித்தர வேண்டும். பழநி கோவில் கும்பாபிஷேகம், விரைவில் நடக்க உள்ளது. அக்கோவில் கும்பாபிஷேகம் தமிழில் நடக்குமா?

அமைச்சர் சேகர்பாபு: அவர் கோரியபடி பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட சாத்தியக்கூறுகள் இருந்தால், கட்டித் தரப்படும். பழநி கோவிலில், 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. முழுக்க முழுக்க தமிழில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது. பழநி முருகன் கோவிலில், தமிழரின் பறைசாற்றும் வகையில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஓதுவாரை வைத்து, மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


latest tamil news

தி.மு.க., ஆட்சி வந்த பின், தேவாரமும், திருவாசகமும், அனைத்து கோவில்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பழநி கோவில் கும்பாபிஷேகத்தில், ஆகம விதிகளுக்கு உட்பட்டு வேதமும் ஓதப்படும். தமிழ் மூல மந்திரமும் ஓதப்படும்.

கோவி செழியன்: கஞ்சனுார் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அக்கோவிலில் இரண்டு தேர் இருந்தது. தற்போது தேரோட்டம் நடக்கவில்லை. தேரோட்டம் நடத்த வேண்டும். கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். விரைவில் மகாமக திருவிழா வர உள்ளது. நவ கிரி கோவில்களை புதுப்பித்து, மகாமகம் திருவிழா சிறப்பாக நடக்க, சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: கஞ்சனுார் கோவில், 2006ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. போதிய நிதி ஒதுக்கப்பட்டு, கோவில் திருப்பணிகள் விரைவில் துவக்கப்படும்.

இவ்வாறு, விவாதம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

13-ஜன-202314:21:16 IST Report Abuse
ஆரூர் ரங் தேவாரம் என்பது தேவ ஹாரம் . முழுக்க சமஸ்கிருத சொல். திரு வாசகம் என்பதில் வாசகம் சமஸ்கிருதப் பெயர். 🤔 இரண்டிலும் உள்ள பெரும்பாலான பாடல்களில் சமஸ்கிருத சொற்கள் பரவலாக கையாளப்பட்டுள்ளன. உள்ளடக்கத்திலும் வேதக் கருத்துக்களின் எதிரொலி. இதே தேவாரம் திருவாசகத்தை படித்தால் எத்தனை பேருக்கு முழு பொருளும் புரியும்? புரியாமல் கேட்கும்போது அது சமஸ்கிருதமாயிருந்தால் என்ன தமிழிலிருந்தால் என்ன?😶 எல்லாவற்றிலுமா அரசியல்?
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
13-ஜன-202306:53:50 IST Report Abuse
Dharmavaan இதை போல் சர்ச் மசூதி பற்றி பேச அருகதை உண்டா
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
13-ஜன-202306:52:22 IST Report Abuse
Dharmavaan இது வழிபாட்டு முறை மத சம்பந்தமானது இதில் தலையிட அறங்கெட்ட துறைக்கு அதிகாரமில்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X