பரமக்குடி--பரமக்குடியில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில் பா.ஜ., சார்பில் தேசிய இளைஞர் தின விழா நடந்தது.
பரமக்குடி நகர் பா.ஜ., இளைஞரணி சார்பில் நடந்த விவேகானந்தரின் 160 வது பிறந்த நாள் விழாவிற்கு நகர் இளைஞரணி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நகர் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் பிரவீன் குமார் வரவேற்றார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், சங்கர், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் சுஜித் பர்மாலா, விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கவி பிரகாஷ், மாவட்ட துணை தலைவர்கள் குமார், கேசவன், மகளிர் அணி செல்வராணி பங்கேற்றனர்.
பரமக்குடியில் வைகை ஆறு குமரன் படித்துறை எனப்படும் தற்போதைய நகராட்சி அலுவலகம் முன்பு விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.